நீ வந்து பேசுகையில்

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

Advertisements

போர்தொடு…

எல்லாத் திசையிலும்
போர்தொடு….

வெற்றி
ஒரு திசையிலேனும்
நம்பிடு…!

போடும்
தூண்டிலை
பலமாய்ப் போடு…src=”https://arivalan.files.wordpress.com/2009/01/for-vani.jpg” alt=”for-vani” title=”for-vani” width=”110″ height=”110″ class=”alignleft size-full wp-image-208″ />

சில
நழுவல்களுக்கு இடையில்
கிடைத்தலும் உண்டு..!

க. அம்சப்பிரியா
பி.சி. பாளையம்
நன்றி: தன்னம்பிக்கை மாத இதழ்<img

அமைதி

செயல் புரியாத அரசன், தன் சுற்றம் என்னும் அமைச்சர் போன்றாரிடம் கலந்து பேசி ஆராய்ந்தும் செய்யாது கோபத்துடனும் நடந்து கொள்வானாயின், அவனுடைய செல்வ்வளம் சிறுத்துக் குறுகி விடும்.