கவிதை

பலவீனமானவைதான்
இரண்டும்!
நூறு கிலோ குளுக்கோஸ்
தந்துவிடாத சுறுசுறுப்பை
காலை நேர உடற்பயிற்சி
கட்டணமின்றித் தரும்!
பூதக் கண்ணாடியில்
குவியும் சூரிய ஒளியில்
பூக்கிறது நெருப்பு!
சிந்தனையை ஒருமுகப்படுத்துவதில்
வருகிறது தெளிவு!
நீர்க்குமில் பட்டு
நீர்மூழ்கிக் கப்பல் அதிராது
சிறுசிறு தடைகளால்
லட்சியங்கள் புதையாது!
பனிமோதி
வலிகொண்ட
கனி ஏதுமில்லை
தடைதாண்டி
தகர்க்காமல்
புகழ் என்றும் இல்லை
நீ உயரும் வரைக்கும்
நழுவுகிற கூட்டம்…
நீ உயர்ந்த பிறகோ
நட்புமுகம் காட்டும்.

பலவீனமானவைதான் இரண்டும்!
நூறு கிலோ குளுக்கோஸ்தந்துவிடாத சுறுசுறுப்பைகாலை நேர உடற்பயிற்சிகட்டணமின்றித் தரும்!
பூதக் கண்ணாடியில்குவியும் சூரிய ஒளியில்பூக்கிறது நெருப்பு!சிந்தனையை ஒருமுகப்படுத்துவதில்வருகிறது தெளிவு!
நீர்க்குமில் பட்டுநீர்மூழ்கிக் கப்பல் அதிராதுசிறுசிறு தடைகளால்லட்சியங்கள் புதையாது!
பனிமோதிவலிகொண்டகனி ஏதுமில்லைதடைதாண்டிதகர்க்காமல்புகழ் என்றும் இல்லை
நீ உயரும் வரைக்கும்நழுவுகிற கூட்டம்…நீ உயர்ந்த பிறகோநட்புமுகம் காட்டும்.

Advertisements