பாரதிராஜா பிரசாரம் எடுபடாது

பாரதிராஜா பிரசாரம் எடுபடாது எ‌ன்று‌ம், அவரது ‌பிரசார‌ம் காங்கிரசுக்கு ஆதரவாக மாறும் என்று‌ம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூரில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தமிழகத்தில் தி.மு.க கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது எ‌ன்றா‌ர்.

இலங்கை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு அங்கு அமைதி ஏற்பட பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன எ‌ன்று‌ம், இதன் காரணமாக தற்போது இலங்கையில் அமைதியான சூழல் உருவாகி உள்ளது எ‌ன்றா‌ர்.

தமிழக மக்கள் நலனை காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன எ‌ன்று கூ‌றிய வாச‌ன்,சினிமா இயக்குனர்கள் உள்ளிட்ட சிலரின் பிரசாரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது எ‌ன்றா‌ர்.

இய‌க்குன‌ர் பாரதிராஜா பிரசாரம் எடுபடாது எ‌ன்று‌ம், மாறாக அது காங்கிரசுக்கு ஆதரவாக மாறும் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர் வாச‌ன்.

பெரியார் திரா‌விட‌ர் கழக‌ம் தயாரித்துள்ள சி.டி காங்கிரசுக்கு எதிரானது அல்ல எ‌ன்று கூ‌றிய வாச‌ன்,அது தமிழக மக்களுக்கு எதிரானது எ‌ன்றா‌ர்.

Advertisements

உறவுகள் மேம்பட…

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க..

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.

2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள். (Loose Talks)

3. எந்த விசயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (Diplomacy), விட்டுக்கொடுங்கள். (Compromise)

4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerance)

5. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். (Adament Argument) குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)

6. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales)

7. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (Superiority Complex)

8. அளவிற்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

9. எல்லோரிடத்திலும் எல்லா விசயங் களையும் அவர்களுக்கு சம்மந்தம் உண்டோ? இல்லையோ சொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.

10. கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11. அற்ப விசயங்களை பெரிதுபடுத் தாதீர்கள்.

12. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (Flexibility)

13. மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். (Misunderstanding)

14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)

15. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16. பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவûத் தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17 அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

18. பிரச்சனைகள் ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்
நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.

அறிவுப் புதையலே…

கனவு காணக் கனவை நனவாக்கக் கற்றுத்தந்தவரே

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே

மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே >>>மேலும்…

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 முறைகள்

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும் கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும். Continue reading

சர்வ சக்தி மயமான – சர்வமும்

சர்வ சக்தி மயமான – சர்வமும் நிறைந்த பரம்பொருள் ஒன்று மட்டுமே எப்படி உண்மையானதோ அதுபோல, சர்வமும் அடங்கிய ஒரே முறையாக, உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வதம் தெய்வப் புலவன் தந்த உலகப் பொதுமறையான திருக்குறள் மட்டுமே ஆகும்!

திருவள்ளுவர்

right

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு அவரின் குறள்பாக்களே சான்று பகிர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும் முடிவுமற்ற – சர்வ வியாபியான பரம்பொருளையே அவர் ஏச இறைவனாக வணங்கியிருக்கிறார்.